, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் உலோகம் மற்றும் உலோக சார்ந்த பொறியியல் திறன்களை சர்வதேச அரங்கிற்கு எடுத்துக்காட்டும் மூன்று நாட்கள் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்துள்ள இந்த கண்காட்சியில், துறையின் துணை செயலாளர் அருண் ராய் ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைச் செயலாளர் சத்யா ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
ஸ்மார்ட் இன்ஜினியரிங் என்பதை கருப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி மூலம் 14.28 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 23 ஆயிரம் வணிக அம்சங்கள், 9 வகையான இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
இந்தக் கண்காட்சியில், உலக அளவிலான கொள்முதல் தொடர்பான கருத்தரங்குகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், ஜி20 அமர்வுகள், 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள், 1500 உலகத் தரம்வாய்ந்த பொருட்களின் விலைப்பட்டியல், 300 கண்காட்சி பங்கேற்பாளர்கள் மற்றும் 10 ஆயிரம் வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றனர்
அனைவரையும் வரவேற்று உரையாற்றிய, இ.இ.பி.சி. இந்தியா தலைவரான அருண் குமார் கரோடியா, “இ.இ.பி.சி இந்தியா பல பத்தாண்டுகளாக, உலகெங்கும் கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியா இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ என்ற இந்த தனித்துவமான நிகழ்ச்சி, உலக அளவில் இந்தியாவின் மகத்துவத்தை முன்னிறுத்துவதற்கு பயன்படுகிறது..