அம்மன் திருக்கோவிலில் மாசி மாத திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டவெட்டி வகையறாவிற்கு பாத் தியபட்ட அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மன் திருக்கோவிலில் மாசி மாத திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மனுக்கு மலர்களால் அலக்காரம் செய்யபட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை வழிப்பட்டனர்.
கம்மாகரை அய்யனார் மற்றும் கருப்பசாமி பூஜைகள் செய்து பட்டவெட்டி பங்காளிகள் பங்குகொண்டு கோவில் நிர்வாகிகள் விழாவை நடத்தி சிறப்பித்தனர்.இவ்விழாவில் விளையாட்டு போட்டிகளை சன்முக நாடார் குடும்பத்தினர் நடத்தினர்.எழுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக பட்டு படவை,இரண்டாம் பரிசு கைகடிகாரம்,மூன்றாம் பரிசுகள் புடவை வழங்கபட்டது.
விழாவில் கலந்துகொண்ட மாதர்பெருமக்களுக்கு கூடை பிரசாதபைகளும் வழங்கபட்டது.இதில் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கம் தலைவர் பட்டவெட்டி டி.உதயராஜீ குடும்பத்தினர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.பட்டிவீரன்பட்டி யாமினி குடும்பத்தினர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.