மிருணாள் தாக்கூர் சம்பளம் ரூ.6 கோடி?

Loading

மிருணாள் தாக்கூர்சம்பளம் ரூ.6 கோடி?துல்கர் சல்மான் நடித்த ‘சீதாராமம்’ படம் பான் இந்தியா முறையில் வெற்றி பெற்றதை அடுத்து, தென்னிந்திய சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய நாயகியாக மாறி இருக்கிறார், இந்தி நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நானி நடிக்கும் தெலுங்கு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.நானியின் 30 வது படமான இதில், அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் அவரும் ஒருவராக மாறியிருக்கிறார். நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் மிருணாள் தாக்கூர் இருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து மேலும் 2 தெலுங்கு, 2 தமிழ், ஒரு மலையாளப் படங்களில் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

0Shares

Leave a Reply