குளுக்கோமா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி

Loading

கோவை மார்ச் மாதம் 12ம்தேதி முதல் 18ம் தேதிவரை, உலக குளுக்கோமா வாரமாக கொண்டாடபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி சிக்னலில் குளுக்கோமா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள்,ஆண்டு தோறும்,மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல், 18ஆம் தேதி வரை உலக குளுக்கோமா வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், இன்று கோவை சரவணம்பட்டி சிக்னலில், பிபிஜி இன்ஸ்டிட்யூட் ஆப் ஆப்ட்டோமெட்ரி, சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ மாணவிகள் குளுக்கோமா நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு வாகன ஓட்டிகள் மத்தியில் நின்றபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இது குறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா சுதா கூறும் பொழுதுகண் நரம்புகளை பாதிப்படைய செய்ய கூடிய இந்த குளுக்கோமா நோய், பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், உலக குளுக்கோமா வாரமாக மார்ச் 12ம் தேதி முதல் 18ம்தேதி வரை அனுசரிக்க பட்டு வருகிறது, நமது உடம்பில் இரத்த அழுத்தம் போல கண் அழுத்தம் இருக்கம், இந்த வகை அழுத்தம் வேறுபடுவதை குளுக்கோமா நோய் என்று நாம் கூறுகின்றோம். எந்தவித மான அறிகுறிகள் இல்லாமல் கண்களின் நரம்பை பாதிக்கும் இந்த வகை நோய்கள் பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இன்று பிபிஜி கர்லூரியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகின்றது என்றார். இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் சார்பாக, ஜான் பிரான்ஸிஸ், அக்ஷய், சாந்தி தங்கவேலு மற்றும் தலைவர் தங்கவேலு என பலரும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply