கோவை தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு
கோவை தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு, இந்திய மக்கள் உரிமைகள் அமைப்பு, தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை இணைந்து எலும்பு மூட்டு மற்றும் தண்டுவட சிகிச்சைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் கோவை புலியகுளம் புனித தெரசா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தேசிய தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். முகாமை டாக்டர் முத்து சரவணகுமார் அவர்கள் துவக்கி வைத்தார். தேசிய செயலாளர் குமார், மாநில தலைவர் ராஜசேகர், மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், மாவட்ட செயலாளர்கள் கோகுலகிருஷ்ணன், தியாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவன தலைவர் கோவை, சி.எம். ஸ்டீபன் ராஜ் அவர்களுக்கு தேசிய தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் சால்வை அணிவித்தார். முகாமில் மாநகர தலைவர் தேவராஜ், மாநகர செயலாளர் செல்வன் மாவட்ட அமைப்பாளர் மைக்கேல் மாறன், மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி, கோவை மாவட்ட தலைவி மாலதி, பெண்கள் குழந்தைகள் பிரிவு தலைவி டாக்டர் சித்ரா, சந்திரசேகர், ஷாபி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.