நவீன டாவின்சி ரோபோ சாதனத்தின் மூலம் சிறுநீர் பாதையில் துல்லியமான, நுண்துளை அறுவைசிகிச்சைகளை வழங்கும் AINU
நவீன டாவின்சி ரோபோ சாதனத்தின் மூலம் சிறுநீர் பாதையில் துல்லியமான, நுண்துளை அறுவைசிகிச்சைகளை வழங்கும் AINUஉலக சிறுநீரக தினத்தன்று இலவச புற்றுநோய் ஸ்கிரீனிங் முகாமையும் நடத்தியது!தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் மெய்நிகர் (வெர்ச்சுவல்) முறையில் இச்சாதன செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.சென்னை, 13. மார்ச் 2023. சிறுநீர்ப்பாதை சிகிச்சையில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி (AINU), புரட்சிகர அறுவைசிகிச்சை சாதனமான ‘டா வின்சி ரோபோ (daVinciRobot)’ என்பதனை அறிமுகம் செய்திருக்கிறது. புதுமையான இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்கும் ஒற்றை சிறப்பு பிரிவு மருத்துவமனைகளுள் ஒன்றாக இந்த அறிமுகத்தின் மூலம் AINU இடம்பிடித்திருக்கிறது.ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி (AINU)-ன் நிர்வாக இயக்குநர் டாக்டர். B. அருண் குமார் இதுபற்றி கூறியதாவது: “இந்தியாவில் டாவின்சி ரோபோ சாதன வசதியை வழங்குகிற ஒற்றை சிறப்பு பிரிவு மருத்துவமனைகளுள் ஒன்றாக உருவெடுத்திருப்பதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம். இச்சாதன அமைப்பின் மேம்பட்ட திறன்களினால் அதிக சிக்கலான மற்றும் நுட்பமான அறுவைசிகிச்சைகளையும் அதிக துல்லியத்தோடு மிகச்சரியாக எங்களால் மேற்கொள்ள இயலும்; இதன் மூலம் நோயாளியின் வலி மற்றும் தழும்பு அளவு குறைவாக இருப்பதோடு விரைவாக மீண்டு இயல்புநிலைக்கு திரும்புவதையும் இது ஏதுவாக்குகிறது.” என்று கூறினார்.