விபத்தில் இறந்த நகராட்சி துப்புரவு மேலாளர் செல்வத்திற்கு நஷ்ட ஈடு 45 லட்சம் வழங்கி தீர்ப்ப
கடலூர் நீதிமன்றத்தில் விபத்தில் இறந்த நகராட்சி துப்புரவு மேலாளர் செல்வத்திற்கு நஷ்ட ஈடு 45 லட்சம் வழங்கி தீர்ப்பகடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நாராயணபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த குப்புசாமி மகன் செல்வம் வயது 54 என்பவர் கடலூர் நகராட்சியில் துப்புரவு மேலாளராக பணி செய்து வந்தவர் அவர் கடந்த 17 10 2019 மாலை 7:30 மணி அளவில் கடலூர் பாலூர் மெயின் ரோடு சுந்தரபாண்டி ராதாகிருஷ்ணன் நிலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த டிஎன்TN -22- CF-8652 என்ற பதிவெண் கொண்ட லாரியை அதன் ஓட்டுனர் அதிவேகமாகவும் அஜாகர்த்தியாகவும் ஆரன் அடிக்காமலும் சாலை விதிமுறைகளை பின்பற்றாமலும் வந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயம் ஏற்பட்டது மற்றும் இறந்து விட்டார் .அவருக்காக அவர் மனைவி தமயந்தி இரண்டு மகன்கள் தமிழ் செல்வ சூரிய பிரசாத் மற்றும் பரத் ஆகிய மூவரும் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அந்த நஷ்ட ஈடு வழக்கை கடலூர் வழக்கறிஞர்கள் ஏ. எஸ் .சந்திரசேகரன், லோ. உஷாராணி , க. கலையரசன் ஆகியோர்கள் ஆஜராகி வழக்கு நடத்தியதில் அவருக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக கடலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி அம்மா சுபா அன்புமணி அவர்கள் முன்னிலையில் இறந்த செல்வத்திற்காக அவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 45 லட்சம் மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு வழங்கி உள்ளார்.இதனை பாராட்டிசெய்தி அலசல் கடலூர் மாவட்ட செய்தியாளர் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது