ராஜ்குமார் பேரன் ஜோடியாக நடிக்கும் காந்தாரா ஹீரோயின்
ராஜ்குமார் பேரன் ஜோடியாக நடிக்கும் காந்தாரா ஹீரோயின் கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரின் மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் யுவ ராஜ்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது.கே.ஜி.எப்’, ‘காந்தாரா’ படங்களைத் தயாரித்த இந்த நிறுவனம் இதையும் தயாரிக்கிறது. சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘யுவா’என்று தலைப்பு வைத்துள்ளனர்.கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம், தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ‘காந்தாரா’ சப்தமி கவுடா நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது.