நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற விழுப்புரம் மாவட்ட தலைவருக்கு சமூக சேவை விருது பெற்றார்

Loading

நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற விழுப்புரம் மாவட்ட தலைவருக்கு சமூக சேவை விருது வழங்கப்பட்டது       விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இயங்கி வரும் உதவும் உள்ளங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட் 2022 -23 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது இவ்  விழாவில் விழுப்புரம் மாவட்ட ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற தலைவர் வழக்கறிஞர் செஞ்சி சேவைதமிழ் லாரன்ஸ் அவர்களுக்கு சிறந்த சமூக மக்கள் சேவைக்கான விருது வழங்கப்பட்டது இவர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தில் தன்னை 2008ல்இணைத்து கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து மன்றத்தின் பொதுச்செயலாளர் சங்கர் ஆலோசனைப்படி சேவைகள் செய்து வருகிறார் இவரின் சிறந்த சேவைகளாக கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றினார் அதன் தொடர் நிகழ்வாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக சுமார் இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறார் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 2019 இல் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பரவ காவடி எடுத்து முதுகில் கொக்கி வேல் அணிந்து ஊர்வலமாக வந்து திரையரங்கம் முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்படம் வெற்றி பெற 108 பால்குடங்கள் ஊர்வலம் வந்து பல அபிஷேகம் செய்து தமிழ்நாட்டிலே எந்த நடிகருக்கும் செய்யாத ஒன்றை செய்தார் மற்றும் மாதந்தோறும் அன்னதானம் மருத்துவ முகாம் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி ஊக்குவித்தல் மழை காலங்களில் உணவு உடை வழங்குதல் இவை அனைத்தும் இவரின் தலைமையில் ரசிகர் மன்ற உறவுகளுடன் செய்து வருகிறார் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் பிறந்த நாள் அன்று ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் இணைந்து அரசு பள்ளி சீரமைத்தல் அன்னதானம் வழங்குதல் பள்ளி குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி கேட்டால் உதவித்தொகை அரசு பள்ளிகள் சீரமைத்தல்  குடிநீர் அமைத்தல் கழிவு வரை என்பது குறிப்பிடதக்கது இவர் சமுக சிறந்த சேவைக்காக இதுவரை பல விருதுகள் பெற்றுள்ளர் இந்த விருதை  நடிகர் மனித நேயம் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்துள்ளார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *