சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொப்பூர் கணவாய் திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழா

Loading

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொப்பூர் கணவாய் திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழா
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொப்பூர் கணவாய் திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் தருமபுரி ஆர்.டி.ஓ தாமோதரன் மற்றும் தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.அவர்கள் பேசும் பொழுது கல்லூரி மாணவர்கள் வாகனத்தை கையாழுவது மிகமுக்கியமான ஒன்றாகும் ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும், மிதமான வேகம் மிக நன்று, சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா பேசும்பொழுது சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் அமைந்துள்ளது. வனப்பகுதியில் வளைவுகளுடனும், தாழ்வாகவும் 2 கி.மீ. தொலைவுக்கு இச்சாலை செல்கிறது. இதனால் இங்கு வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாவதும், அதனால் உயிர்சேதம் ஏற்பட்டும் வருகிறது. டிசம்பர் 12,2020 அன்று, தொப்பூர் வனப்பகுதியில் 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது இதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் 5பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சோனா எம்பிஏ-வைச் சேர்ந்த எங்கள் மாணவர்கள் குழு, மற்றும் சோனா ஸ்டார் நிறுவனமும் இணைந்து சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை குறித்த ஆய்வு அறிக்கை செயல்பாட்டைத் தொடங்கினர். சோனா எம்.பி.ஏ குழுவினர், தொப்பூர் காவல் நிலையம் மற்றும் தர்மபுரி ஆர்.டி.ஓ-வை அணுகி, கடந்த 10 ஆண்டுகளாக நடந்த விபத்துகள் குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர்.“தொப்பூரில் சாலை விபத்துகள்” குறித்த ஆரம்ப அறிக்கையை தருமபுரி மாவட்ட ஆட்சியர்,  தொப்பூர், டிஎஸ்பி- காவல் ஆய்வாளர், ஆர்டிஓ, துணை போக்குவரத்து ஆணையர், எல் & டி டோல் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டன. தொப்பூர் வனப்பகுதியில் கடந்த 10 வருட விபத்து நடந்த மாதிரிகள், சாலை விபத்துகளை பாதிக்கும் காரணிகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை விவாதித்து அவர்களின் தேவைகளின் அடிப்படையில் இறுதி ஆய்வு அறிக்கை வடிவமைத்து சமர்பித்துள்ளனர் அந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். மேலும் இதனைதொடர்ந்து சோனா ஸ்டார் நிறுவனமும் சோனா எம்,பி.ஏ குழுவும் இதுபோன்ற சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை சம்மந்தமான திட்டங்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படுத்த உள்ளனர்.
பின்னர் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்த சோனா எம்.பி.ஏ மாணவ குழுவிற்கு தருமபுரி ஆர்.டி.ஓ தாமோதரன் வாழ்த்துகளையும் பாராட்டுகளை தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா, முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ், சோனா ஸ்டார் குழுவினர் ஆகியோர் உடன் இருந்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *