ஏப்ரல் 7 முதல் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’

Loading

ஏப்ரல் 7 முதல் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’நடிகர் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் திரைப்படம் ஏப்ரல் 7 முதல் வெளியாகவிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.அறிமுக இயக்குநர் யு. கவிராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’. இதில் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாஸ்வி பாலா நடித்திருக்கிறார். இவர்களுடன் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், மொட்டை ராஜேந்திரன் , பிஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பை கௌதம் ரவிச்சந்திரன் கையாள, கலை இயக்கத்தை பி. சேகர் கவனித்திருக்கிறார். ஃபேண்டஸி காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராவுத்தர் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ முஹம்மது அபூபக்கர் தயாரித்திருக்கிறார். ஏ எம் மன்சூர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் முன்னோட்டம் வெளியாகி லட்ச கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. ஏழ்மையில் வசித்து வரும் ஆரி அர்ஜுனன் எனும் கதாபாத்திரத்திற்கு.. வேற்று கிரகத்திலிருந்து சதுர வடிவிலான வினோத பொருள் ஒன்று கிடைக்கிறது. இதனால் இவருக்கு அதீத சக்தி உண்டாகிறது. இதன் மூலம் அவர் தனக்கும்.. தன்னைச் சார்ந்தவர்களுக்கும்.. இந்த பூமிக்கும் நன்மையை செய்தாரா? அல்லது வேற்றுக்கிரகவாசிகள் இதனை மீண்டும் கைப்பற்றுவதற்காக பூமிக்கு வந்தார்களா? என்ற சுவாரசியமான கேள்வி இடம்பெற்றிருப்பதால்… இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதுஏப்ரல் 7 முதல் உலகமெங்கும் ஓரே நேரத்தில் வெளியாகிறது.இப்படத்தை சரஸ்வதி என்டர்பிரைசஸ் T.செந்தில் தமிழகமெங்கும் வெளியீடுகிறார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *