காவேரி ரத்தப் புற்றுநோய் விழிப்புணர்வு
காவேரி ரத்தப் புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் 5000 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.சென்னை, மார்ச் 8- தகவல் தொழில்நுட்ப சேவைகளில் உலகில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (டிசிஎஸ்) ஐந்தாயிரம் ஊழியர்கள், ரத்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.அவர்களின் உணர்வைப் போற்றும் வகையில், தமிழகத்தின் முன்னணி பல்நோக்கு சங்கிலி தொடர் மருத்துவ குழுமமான சென்னை காவேரி மருத்துவமனை, அவர்களுக்காக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் புற்றுநோய் குறித்து அறிந்து கொள்வதற்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இது குறித்து பேசிய சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இன்றைய இளைஞர்கள் சிறப்பான எதிர்காலத்தை திட்டமிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ள புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு இந்த தகவலை எடுத்துச் செல்வதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உன்னதமான நோக்கத்திற்காக டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்துசெயல்படுவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். மேலும் ரத்த புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்ப உதவுகிறோம். இந்த உன்னதமான காரியத்திற்கு ஆதரவளிக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதிக விழிப்புணர்வு, சிறந்த நோய் தடுப்பு மற்றும் மீட்பு,” என தெரிவித்தார்..