ஜுனியர் கல்லூரி வளாகத்தில் விற்பனை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
மஹாவீர் இண்டர்நேஷ்னல் வழங்கும் ராயல் ஹோலி மேளா சென்னை வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் உள்ள அகர்வால் வித்யாலயா மற்றும் ஜுனியர் கல்லூரி வளாகத்தில் விற்பனை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
70க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் தயாரிப்புகளை ஸ்டால்கள் அமைத்து காட்சிப்படுத்தி அவர்களின் வணிகம் மற்றும் சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கினர்.கண்காட்சி தொடக்க நிகழ்வில் கம்லா மேத்தா மஹாவீர் இன்டர்நேஷனல் ராயல் தலைவர் சஜ்ஜன் ராஜ் மேத்தா பார்வையாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் அனைவரையும் வரவேற்றார்.ராகேஷ் கோத்தாரி குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்.ராகேஷ் கட்டேட் நெறிப்படுத்தினார்.இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான பராஸ் சஞ்சேதி மற்றும் டிம்பிள் நிவேத்தியா ஆகியோர் பாராட்டத்தக்க பணியை செய்து அழகான ஏற்பாடுகளை வழங்கினர்.மஹாவீர் இன்டர்நேஷனல் ராயலின் இந்த பிரமாண்டமான கண்காட்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை சேவைகளை வழங்கிய ரமேஷ் சோர்டியா,கம்லா மேத்தா,அல்கா கடெட்,உஷா கின்வ்சாரா,ராஜேந்திர கலானி,கோதம் கத்ரேலா, பிரியா அபானி,லலித் கட்டாரியா,நிர்மலா ஆகியோரை சிறப்பித்தனர்.சல்லானி,சஜ்ஜன் ராஜ் கோத்தாரி,கியான் கோத்தாரி போன்றோர் தங்கள் மதிப்புமிக்க சேவைகளை வழங்கினர்.இதில் ஆர்கானிக் அழகுசாதனப் பொருட்கள், வைர நகைகள், புடவைகள், ஆடைகள், புற்றுநோய் நிவாரண மருந்து, வலி நிவாரண மருந்து ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்கள் சுவையான உணவை வாங்கி மகிழ்ந்தனர்.இதில் உறுப்பினர்கள் மஹாவீர் இன்டர்நேஷனல் அதிகாரிகள் மற்றும் பல பிரபலங்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.