4 கிலோ மீட்டர் தூரம் நடந்து திருவள்ளூர் எம்பி காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு :

Loading

திருவள்ளூர் முதல்  ஸ்ரீபெரும்புதூர் எஸ்பிபிஆர்  நெடுஞ்சாலை விரிவாக்கம் போலிவாக்கம் மேல்நல்லாத்தூர் வெங்கத்தூர் மணவாளன் நகர் வரை4.1கிலோ மீட்டர்  நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் முறைகேடு நடப்பதாகவும் சாலை விரிவாக்கத்திற்கு தோன்றிய பள்ளம் மற்றும் மழை நீர் வடிகால் பணிக்கு தோண்டிய மண்ணை எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இதன் மூலம் ஊழல் நடைபெற்று இருப்பதாக கிராம மக்கள் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தனர் சுமார் 50 கோடி திட்ட  மதிப்பில் மந்தகதியில்  பணிகளை மேற்கொண்டு வருவதை 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆய்வு செய்த திருவள்ளூர் எம்பி யும் காங்கிரஸ் செயல் தலைவருமான  ஜெயக்குமார் சாலை விரிவாக்கத் திற்கு தோண்டிய  8 கிலோ மீட்டர்  மண் மாயம் ஆனது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாலை விரிவாக்கம் செய்ய எடுத்த மண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல கோடி ருபாய் மண் கொள்ளை போனதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் 4கிமீ  நடந்தே ஆய்வு செய்த எம்பி ஜெயக்குமார் பார்வையிட்ட போது  அதிர்ச்சி அடைந்து போய் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை .மழை  நீர் வடிகால்  அமைத்ததிலும்  முறைகேடு நடந்திருப்பதை சுட்டிக்காட்டியதுடன் தர மற்ற முறையில் பணிகள் மேற்கொண்டுள்ளதற்கு அதிருப்தியை தெரிவித்தார்.மேலும் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்படாமல் தனியார் நிறுவனத்திற்கு சாதமாக மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்த அவர் ஆறு மாதத்திற்குள் பணியை முடிக்க தரமான முறையில் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *