ஸ்ரீ வடபத்ர காளியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
![]()
சேலம் உத்தமசோழபுரம் கிராமம் தெய்வத்திரு பொன்னுசாமி கவுண்டர் லட்சுமி அம்மாள் அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ர காளியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தாவும் தலைவருமான ஏவி ஜெகன், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செயலாளர் பி வி பெருமாள், பொருளாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஸ்ரீ வடபத்ர காளியம்மனை வழிபட்டனர். பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.இக் கோவிலில் ஒவ்வொரு அம்மாவாசை அன்று ஸ்ரீ சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது.என கோவில் தர்மகர்த்தா ஜெகன் அவர்கள் தெரிவித்தார்.பல யாகங்கள் சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டன.இவ்விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன்,வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் வருதராஜ்,வீரபாண்டி ஒன்றிய குழு துணை தலைவர்,வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி,மற்றும் பலர் கலந்து கொண்டு காளியம்மனை தரிசித்தனர்.கோவில் நிர்வாகிகள் தமிழரசன், விக்காஷ்,இனியவன்,
ஷரண்குரு, மற்றும் பங்காளிகள், கணேஷ்கர்கள்,மாமன் மைத்துனர்கள்,மகளிர் குழுவினர்கள்,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

