ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப்போராட் டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெல்கிராஜாசிங், ஷேக்கபூர், ராஜாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு பேசினார். மேலும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சா.ஞானசேகரன், அந்த சங்கத்தின் மாநில தலைவர் ஜவஹர், மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். அப்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து வரையறை செய்த ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கவும், அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம்மட்டும்பணியமர்த்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்சீ.காந்திமதிநாதன், மாநில துணைத் தலைவர் ஏ.மணிகண்டன், மாவட்ட தலைவர் தேவதிசயம் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் குப்புசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.சந்தோஷ்மேரி நன்றி தெரிவித்தார்.