மும்பையில் சந்திரமுகி-2 படப்பிடிப்பு

Loading

மும்பையில் சந்திரமுகி-2 படப்பிடிப்புசந்திரமுகி-2 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2வது பாகம் சந்திரமுகி-2 பெயரில் உருவாகி வருகிறது. இதில் வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.சந்திரமுகியாக கங்கனா ரனவத் நடிக்கிறார். ஹாரர் திரில்லர் படமாக இது உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு, இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத் பங்கேற்று நடித்து வருகின்றனர். சந்திரமுகி அவதாரம் எடுத்து கங்கனா நடிக்கும் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்காக 2 மணி நேரத்துக்கு மேலாக கங்கனாவுக்கு மேக்அப் போடப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நடித்தபடி எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி, கங்கனா நடித்து வருகிறார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *