போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.  

Loading

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.  அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (05.03.2023) அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழப்பழூர் ஊராட்சியில் கீழப்பழூர் காவல் நிலைய அருகில் பொதுப்பணித்துறை (கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு)த்துறை சார்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்களால் இன்று அடிக்கல் நாட்;டப்பட்டது. இவ்வலுவலகம் ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளம் 2453 சதுர அடியில் உதவி இயக்குநர் அறை, வரவேற்பு அறை, அலுவலக அறை, நகல் எடுக்கும் இயந்திர அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதல் தளம் 2453 சதுர அடியில் அலுவலக அறை, பதிவறை, சேமிப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக 365 சதுர அடியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 355 சதுர அடியில் இருச்சக்கர வாகனம் நிறுத்திமிடமும் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்ற்கு கொண்டுவர மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (பொ.ப) திரு.மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் திரு.தேவேந்திரன், உதவி பொறியாளர் செல்வி.அட்ஷயா, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர் திரு.கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *