இலவச பொது மருத்துவ முகாம் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக வருகை
விருதுநகர் இந்து நாடார்கள் சாரிடபுள் சொஸைடி சார்பாக பிரத மந்திரியின் மக்கள் மருந்தகம் நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.விருதுநகர் இந்து நாடார்கள் சாரிடபுள் சொஸைடி சார்பாக பிரத மந்திரியின் மக்கள் மருந்தகம் நடத்தும் சிறப்பு விழிப்புணர்வுவாரத்தை முன்னிட்டு சென்னை பழையவண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு மரகதம் மாளிகையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.டாக்டர் ஜெ.சரத்ராஜ் ஜெயசந்திரன் தலைமையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை துவக்கி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக வருகைதந்து குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கிவைத்தார்.விருதுநாகர் இந்து நாடார்கள் சாரிடபுள் சொஸைட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் பொதுமருத்துவம்,கண் பரிசோதனை,காது,மூக்கு,தொண்டை மருத்துவம்,இ.சி.ஜி பரிசோதனை,இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் பரிசோதனை,பிசியோ தெரபி,அக்குபஞ்சர் போன்ற மருத்துவங்கள் புகழ் பெற்ற மருத்துவர்களால் மருத்துவம் பார்க்கபட்டு இலவசமாக மருந்துகள் வழங்கபட்டது.இதில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து பயண்பெற்றனர்.