மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி, மாணவ, மாணவியர்களோடு அமர்ந்து காலை உணவருந்தினார்.

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, காமராஜர் நகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் பட்டாபிராம் சத்திரம், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவுகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி, மாணவ, மாணவியர்களோடு அமர்ந்து காலை உணவருந்தினார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஊட்டச் சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0 – 6 வயது  3885 குழந்தைகளுக்கு 56 நாட்களுக்கு தேவையான சிறப்பு உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும், 0-6 மாத வயதுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய 567 குழந்தைகளின் தாய்மார்களுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மிதமான குழந்தைகளின் 69 தாய்மார்களுக்கு நெய், புரத சத்துமாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம் போன்றவை உள்ளடக்கிய ஒரு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 1760 குழந்தைகள் மையங்களில் பயன் அடைந்து வரும் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 72238 குழந்தைகள், 12,004 பாலூட்டம் தாய்மார்கள் மற்றும் 11,958 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் மையங்களின் மூலம் புதிய மூலப் பொருட்கள் அடங்கிய சத்துமாவுகளும் வழங்கப்படுகிறது. இதன் தொடக்கமாக, ஆவடி மாநகராட்சி, காமராஜர் நகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு  இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் குழந்தைகள் மையங்கள் மூலம் பயனடைந்து வரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு  சத்துணவு மாவுகளையும் பால்வளத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார்.இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார்,ஆணையாளர் தர்பகராஜ், துணை மேயர் சூரியகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *