ஏ ஐ டி யு சி பாப்ஸ்கோ ஊழியர்கள் சங்க பேரவை கூட்டம் இன்று பாக்கமுடியான் பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்றது
மாநிலபொதுச் செயலாளர் Kசேதுசெல்வம் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
மேலும், பாப்ஸ்கோ சங்க நிர்வாகிகள் செயலாளர், S.ஜெய்சங்கர், பொருளாளர் G.சிவனானவேலன் @ பிரபு, மற்றும் சங்க நிர்வாக பொறுப்பாளர்கள். துணைத்தலைவர்கள் D.பத்மநாபன், K அமுதவல்லி, M. முனுசாமி @ நாகராஜ்,K.நடராஜ், துணை செயலாளர், ,S. முருகவேல், M.வேலு, R.ரவி கமிட்டிஉறுப்பினர்கள், , S.ஜீவரத்தினம், P. விசுவநாதன், T. குமரகுரு, K. அமுதா, S.அமுதா,K.சத்திய சீலன், மற்றும் S.ராஜிஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் விவாதித்து கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 65 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏஐடியுசி தலைமையில் கடந்த14.9.2022 முதல் தொடர்ந்து 13 நாட்களாக பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இப் போராட்டத்தின் விளைவாக30.9.2022 அன்று . அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலர் உதயகுமார் உடன் இருந்தார்.
ஏ ஐ டி யு சி தொழிற்சங்க தலைவர்கள் , மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது, அனைத்து கடன்களையும் தீர்ப்பது என அமைச்சர் உறுதி அளித்தார்.ஊழியர்களுக்கு உடனடியாக 3 மாதம் நிலுவை ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என அமைச்சர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.இதனை ஏற்று ஊழியர்களின் தொடர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து தீபாவளி பஜார் இந்த ஆண்டு நடத்தப்பட்டது. ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது. அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தவாறு இரண்டு மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நிலுவை ஊதியம் வழங்குவது, நிலுவையில் உள்ள கடனை அடைப்பது போன்றவைகள் நடைபெறவில்லை இதுவரை நடைபெறவில்லை எனவே விரைவாக இதனை செய்து முடிக்க அரசை வலியுறுத்தி முதலமைச்சர் துறையின் அமைச்சர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்து என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.