ஆ.ஹென்றி அவர்கள் சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற கொலை பாதகச் செயலை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளார்.
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற கொலை பாதகச் செயலை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் முதுநிலை கல்வி பயிலும் மாணவர்கள் 60 க்கும் மேற்பட்டவரை கல்லூரி நிர்வாகம் விழுப்புரம் மாவட்டத்திற்கு பேருந்து மூலம் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதற்காக அழைத்துச் செல்வதாக கூறி பெற்றோர்களிடம் அனுமதி பெற்று, சென்னையில் இருந்து தொடர் வண்டி மூலம் விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்று பிறகு அங்கிருந்து பொலிரோ மேஜிக் டிரக் என்கிற ஆட்டோ போன்ற வாகனத்தில் 30 க்கும் மேற்பட்டவர்களை கோழிகளை கூண்டில் அடைப்பது போன்று அடைத்து விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூரை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றனர்.மேலும் லக்கேஜ் ஏற்றும் வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்றது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்என்பதை உணராமல்
மேற்கண்ட வாகனத்தில் பயணித்தால், பேராபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மேற்கண்ட ஆபத்தான பயணத்தை தங்கள் கல்லூரி முதுநிலை மாணவர்களை வைத்து மேற்கொண்டுள்ளது.
இதனால் அங்கு விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாணவர் திரு.R.சாமுவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எலும்பு முறிவு மற்றும் பலவிதமான விபத்து ஏற்பட்டு மேற்கண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை கல்லூரி நிர்வாகம் வெளியில் தெரிவிக்காமல் ஒரு சில அதிகாரமிக்கவர்கள் மூலம் மூடி மறைக்க பார்க்கின்றனர். மாணவர்களை இழந்த பெற்றோர்களின் மனநிலை எப்படியெனில், இது அவர்களுக்கு பேரிழப்பு, பிள்ளைகளை இழந்து இம்மண்ணில் இனி வாழக்கூடாது என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தின் இந்த கொலை பாதக செயலை நான் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. ஒரு தகப்பனாக என் மனம் நொறுங்குகிறது. இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்..
தமிழக அரசும், காவல்துறையும் இந்த சம்பவத்தை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, இதில் எந்த விதமான பாரபட்சமும், சமரசமும், எதுக்காகவும், யாருக்காகவும்சமரசம் செய்து கொள்ளாமல், சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்என தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு இந்த சம்பவத்தில் எடுக்கும் நடவடிக்கை இனி இது போன்ற திட்டமிட்டு ஆபத்தான பயணத்தை முன்னெடுத்து, கொடுமையான கொலைபாதகச் செயலில் எந்த ஒரு கல்லூரி நிர்வாகமும் ஈடுபடுவதற்கு யோசிக்கும் வகையில், முன்னுதாரணமாக அரசின் நடவடிக்கை அமைந்திட வேண்டும் என தமிழக அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.