ஒரேநாளில் நடக்கும் கதையில் மும்பை மாடல்
இயக்குனர் ராம் உதவியாளர் தனபாலன் கோவிந்தராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம், ‘பருந்தாகுது ஊர் குருவி’. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் ஈ.ஏ.வி.சுரேஷ், பி.சுந்தரகிருஷ்ணா, வெங்கி சந்திரசேகர் தயாரித்துள்ளனர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா, மும்பை மாடல் காயத்ரி அய்யர், வினோத் சாகர், அருள் டி.சங்கர், கோடங்கி வடிவேல், ஈ.ராம்தாஸ் நடித்துள்ளனர். அஸ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘மதயானைக்கூட்டம்’ என்ற பாடல் வெளியானது. ரெஞ்சித் உன்னி இசயில் அவரும், ராகுல் நம்பியாரும் பாடினர். விதாகர் எழுதி இருக்கிறார். கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் ஆகியோரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பும், பிறகு ஏற்படும் நிகழ்வுகளும்தான் கதை. காட்டுக்குள் சிக்கிய அவர்கள் எதிரிகளிடம் இருந்து தப்பித்தார்களா என்ற கதையை, ஒரேநாளில் நடந்து முடியும் சில சம்பவங்களாக சொல்லப்பட்டு உள்ளது. இந்தியாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. வஞ்ச கமும், சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்ற மையக் கருத்தைப் படம் சொல்கிறது.