சுவாமி அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அறம்வளர்த்தநாயகி சமேத அருள்மிகு நகரீஸ்வரமுடையார் தீருக்கோவில் மாசி மூன்றாம் திருநாள் பண்பொழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கரிசல்குடியிருப்பு சிவ ஸ்ரீ சங்கரசுப்பிரமணியத்தேவர் மண்டகப்படியை முன்னிட்டு சுவாமி அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது. அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தலைமை அர்ச்சகர் அகோர சிவம் சிவ ஸ்ரீ திருமேனிநாத பட்டர் (எ) ரமேஷ் பட்டர், துரை பட்டர், ஹரிபட்டர் ஆகியோர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்தினர். இரவு சப்பரத்தில் நகரீஸ்வரமுடையார் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சப்பர வீதி உலா நடை பெற்றது.