ஐவிஎப் கருத்தரித்தல் மையம் பூந்தமல்லி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் :

Loading

திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்  டாக்டர் அரவிந்த்ஸ் ஐவிஎப் கருத்தரித்தல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். அரவிந்த் சந்தர்,  மற்றும் டாக்டர்.ஏ.ரேஷ்மா ஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவமனையை பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவனையில் உள்ள ஆய்வகம், மருந்தகம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த மருத்துவமனையில் இயற்கை முறை கருத்தரித்தல், செயற்கை முறையில் விந்தணு உட்செலுத்துதல்,  சோதனைக் குழாய் கருத்தரித்தல், அதிநவீன முறையில் சோதனை சிகிச்சை,  லாப்ராஸ்கோபி, ஆண்ராலஜி,  ஹிஸ்டரோஸ்கோபி,  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலட்டுத்தன்மை கண்டறியும் சோதனை போன்ற அனைத்து விதமான சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படும் என மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த் சந்தர் தெரிவித்தார்.  மேலும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த மருத்துவமனையில் குழந்தையின்மை பிரச்சினைக்கான மூல காரணத்தை அறிய, விரிவான ஆலோசனை மற்றும் கருவுறுதல் பகுப்பாய்வு மதிப்பீட்டு சோதனை எடுக்கப்படுகிறது.  மேலும் இங்கு அனைத்து உயர்தர கருத்தரித்தல் ஆய்வகம், ஸ்கேன், லேப்ராஸ்கோபிக் வசதிகள் மற்றும்  நிபுணர் மற்றும் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் குழுவினர் ஆலோசனைகளை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் தலைமை இயக்க அதிகாரி டாக்டர். எஸ். துர்கா நாயுடு, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன்,  ஒன்றிய அவைத் தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ், தலைமை விஜிலன்ஸ் அதிகாரி பி.மதியரசன், மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்  சொக்கலிங்கம்,  துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *