மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஒரு நாள் கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது, சா-தன் அமைப்பு!

Loading

குறுநிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தாக்கம் செலுத்தும் நிதி நிறுவனங்களின் சங்கமும், குறுங்கடன் துறைக்காக ரிசர்வ் வங்கி நியமித்த எஸ்.ஆர்.ஓ.வுமுமான சா-தன் (Sa-Dhan) – ‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி குறித்த தென்னிந்திய மாநாட்டை’ (South India Conference on Financial Inclusion)   சென்னையில் நடத்தியது.தென்னிந்தியாவில் குறுங்கடன் (Microfinance) மூலம் இதுவரை சேவை பெறாத மற்றும் பின்தங்கிய மக்களுக்கு கடன் வழங்கும் முறையை விரிவுபடுத்துவதன் மூலம், நாட்டின் தென் மாநிலங்களில் அனைவரையும் உள்ளடக்கிய நிதி அடைந்துள்ள வளர்ச்சி குறித்த இந்த மண்டல அளவிலான மாநாடு, முதல் முறையாக நடைபெறுகிறது.இந்த மாநாட்டை குறித்து சா-தன் செயல் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. ஜிஜி மேமன் (Mr. Jiji Mammen) கூறுகையில், “அனைவரையும் உள்ளடக்கிய நிதியில் நாட்டின் மற்ற பகுதிகளைவிட தென்னிந்தியா முன்னணியில் உள்ளது. தென்னிந்தியாவில் குறுநிதி பெற்ற வெற்றி இதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. 1980-களில் மிராடா (MYRADA)-வால் ஊக்குவிக்கப்பட்ட சுயஉதவி இணைப்புக் குழுக்கள், சுயஉதவி குழுக்கள்-வங்கி இணைப்புத் திட்டமாகப் பரிணமித்தது. கூட்டுப் பொறுப்பு கொண்ட குழுக்களுக்கு குறுநிதி நிறுவனங்கள் எனப்படும் சிறப்பு நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கான திறனையும் நிரூபித்தது.அந்த வகையில் புதிய பாதையை தென்னிந்தியா காட்டியது. எனவே, உண்மையான அனைவரையும் உள்ளடக்கிய நிதி சார்ந்த மதிப்புமிக்க படிப்பினைகளை தென்னிந்தியா தந்துள்ளது. இந்தத் துறை எதிர்கொண்ட வெற்றிகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவிலும் உலகிலும் உள்ள பரவலான குறுங்கடன் நோக்கர்களுக்கு இந்தப் பாடங்களைப் பரப்புவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *