மாநகர் பாஜக சார்பில் தூய்மை பணி மற்றும் இலவச மருத்துவ முகாம்
மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக செல்லூர் மண்டல் தலைவர் தனுஷ்கோடி தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் முன்னிலையிலும் தூய்மை பணி நடைபெற்றது. உடன் நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொது செயலாளர்கள் துரை பாலமுருகன், வினோத்குமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள், தாமரை சேவகர்கள் குழுவினர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் மனோகரா நடுநிலைப் பள்ளியில் மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் முரளி பாஸ்கரன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் இலவச கண் சிகிச்சை, சர்க்கரை ரத்த அழுத்தம், பொது மருத்துவம் அளிக்கப்பட்டது. முகாமில் பங்குபெற்ற பயனாளிகளுக்கு இலவச மருந்து மாத்திரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.