ஈரோடு கிழக்கு தொகுதியில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சார சுற்றுப்பயணம்.

Loading

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சார சுற்றுப்பயணம் மாற்றம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தி.மு.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்குள்ள கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினரிடம் தேர்தல் பணி நிலவரத்தை கேட்டறிந்து வருகிறார். ஈரோடு தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும், நாளையும்  (வெள்ளி, சனி) 2 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பிரசார சுற்றுப்பயணத்தில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து இன்று  மாலை விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். மறுநாள் சனிக்கிழமை காலையில் வீதி வீதியாக சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ம் தேதி வாக்கு சேகரிக்கும் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
சனிக்கிழமை காலை 1. சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். பேசும் இடம்-சம்பத் நகர் (காலை 9 மணி),வழி- பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பஸ் நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி. 2. பேசும் இடம்-காந்தி சிலை (காலை 10 மணி), வழி-கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு. 3. பேசும் இடம்-அக்ரஹாரம் (காலை 11 மணி), வழி- பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி. சக்தி சுகர்ஸ் (தங்குதல்) மதியம் சக்தி சுகர்ஸ், சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி, பேசும் இடம்-முனிசிபல் காலனி (தலைவர் சிலை) (மாலை 3 மணி) வழி-மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா. பெரியார் நகர் (மாலை 3.45) அதன்பிறகு சக்தி சுகர்ஸ் சென்றுவிட்டு கோவை வழியாக சென்னை திரும்புகிறார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *