சென்னை முகலிவாக்கத்தில் கண்காணிப்பு கேமார்களுடன் கூடிய தற்காலிக காவல் நிலையம்.
சென்னை ஆவடி ஆணையகரத்திற்கு உட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய தற்காலிக புறகாவல் நிலையத்தினை முகலிவாக்கம் அரசமரம் அருகில் ஆவடி காவல் ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர், IPS.,அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் உடன் துணை ஆணையர் திரு. பாஸ்கரன், உதவி ஆணையர் திரு ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு ஆய்வாளர் திரு. ராஜி, குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. லதா மகேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றினர் இதனைத் தொடர்ந்து பேசிய ஆணையர் இத்தற்காலிக காவல் நிலையத்தில் காவலர்கள் தொடர் பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார் இக்கண்காணிப்பு கேமராக்களின் வாயிலாக குற்றங்கள் வெகுவாக தடுக்கப்படும் என்றும் மேலும் இக்காவல் நிலையம் துவங்கியதின் முக்கிய நோக்கமானது பொதுமக்கள் பயனடையும் வகையில் சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று எடுத்துரைத்தார் இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கு பெற்ற அரசு பள்ளி மாணவர்களுடன் உரையாடிய அவர் மாணவர்களுக்கு சால்வைகள் அணிவித்து மகிழ்ந்தார்.முன்னதாக காவல் நிலையத்தின் சார்பாக கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன