தமிழ் வேகமாக அழிந்து வருகிறது கடலூர் பொதுக்கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பரப்புரை

Loading

தமிழ் வேகமாக அழிந்து வருகிறது கடலூர் பொதுக்கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பரப்புரை கடலூர்.பிப் .25. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் பா.ம.க. நிறுவனரான டாக்டர். ராமதாஸ், தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த 26, ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர் பிரச்சார பயணத்தின் மூன்றாவது நாளான  கடலூர் திருப்பாதிரிப்புலியூரில்விழிப்புணர் பிரச்சார பயணம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறக்கட்டளை தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கொங்கு தமிழ் அறக்கட்டளை சேர்ந்தவரும் பாமக மாவட்ட செயலாளருமான வக்கீல் சண். முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.பா.ம.க. மாவட்ட செயலாளர் கோ.ஜெகன், மாநில நிர்வாகிகள் பா.தாமரைக்கண்ணன், கோபிநாத், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பு தலைவர் குழந்தை வேலனார் ஆகிய முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:. தமிழையும் தமிழன்னையும் தேடி வருகிறேன். தமிழ் புலவர்கள் சான்றோர்கள் வீட்டில் பதுங்கி இருக்கிறதா? என்று கேட்டால் அங்கு கலப்பு மொழி தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட புலவர்கள், அறிஞர்கள் வீடுகளிலும் தமிழை கலப்பு மொழியாக  தான் பேசி வருகின்றனர். மேடையில் மட்டும் தமிழ் அன்னை என்று பேசினார்கள்.நான் மதுரை வரை தமிழன்னை தேடி செல்கிறேன். மெல்ல தமிழ் இனி சாகும் என்று திருநீலகண்ட சாஸ்திரி கூறினார். அவர் கூறியது போல தமிழ் மெல்ல அல்ல வேகமாக செத்து வருகிறது. தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் தமிழ் வேகமாக அழிந்து வருகிறது. கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கில் பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழ் பேசுவதில்லை.கலப்பு மொழியில் தான் தமிழ் பேசுகிறோம். ஒன்று செய்யலாம் அதாவது வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்களை தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள அறிஞர்கள், புலவர்கள் சொல்ல வேண்டும். ஒரு மாதம் கழித்தும் அது நடக்கவில்லை என்றால் கருப்பு மை வைத்து அழியுங்கள். பிரான்ஸ் நாட்டில் தேங்க்ஸ் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு மெர்சி என்று மாற்றி விட்டனர். ஆனால் நாம் 100-க்கு 99 வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசி வருகிறோம். தமிழை தமிழன்னையை தேடி மதுரை செல்கிறேன். அதற்குள் தமிழ் அன்னை இங்குதான் இருக்கிறது என்று யாராவது சொன்னால் எனது பிரச்சாரத்தை தள்ளி வைக்கிறேன். தமிழ் அன்னையை பார்க்க ஓடி வருவேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். நிகழ்ச்சியில் கொங்கு தமிழர் அறக்கட்டளை புதா. அருள்மொழி, கோவிந்தசாமி, விஜயவர்மன், போஸ்.ராமச்சந்திரன், வக்கீல் தமிழரசன், மருத்துவர் நவீன் பிரதாப், ஏர்டெல் சரவணன், மாநில நிர்வாகிகள் பி.ஆர்.பி வெங்கடேசன், இளைஞர் சங்க சுந்தரசேகர், சரவணன், ரமேஷ், தனசேகர் சங்கர், ஸ்டாலின், பால்ராஜ், ரத்தினவேல், சகாதேவன், ஆனந்த்ராஜ், சுதாகர், சோழன், பிரேம்குமார், பாலு, ராமலிங்கம், பால விநாயகம், வெங்கடேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *