கந்த சஷ்டி பெருவிழாவை உலகறிய செய்யும் முயற்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி

Loading

தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் முருக பெருமானின் இரண்டாம்  படை வீடு என்றழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி பெருவிழா  கொண்டாடப்படுவது வாடிக்கை இந்த நிலையில் கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கியத்துவத்தை உலகறிய செய்யும் முயற்சியாக திருசெந்தூர் எனும் பெயரில் ஒரு குழு நடனத்தை கோவையில் 14 ஆண்டுகளாக பரதநாட்டிய கல்வி நிலையமாக திகழ்ந்து வருகின்ற பக்தி நாட்டிய நிகேதன் நிலையத்தில் இசைப்பயின்ற மாணவி கருணா சாகரி என்வருடன் அவர்களது குழுவினர் வடிவமைத்து உள்ளனர். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள சைமா அரங்கில் இன்று நடைபெற்றது. அப்பொழுது இந்த இசை நிகழ்ச்சி குறித்து பேசிய பக்தி நாட்டிய நிகேதன் பள்ளி மாணவியான கருணாசாகரி கூறும் பொழுது…
திருப்புகழில் வேரூன்றி நிற்க்கும் தமிழ் குடும்பத்தில் இருந்து வந்துள்ள நானும் எனது குழுவினரும் இணைந்து கந்த சஷ்டி பெருவிழாவை உலகறிய செய்யும் வகையில் திருச்செந்தூர் எனும் குழுநடனத்தை வடிவமைத்து உள்ளதாகவும் இந்த நடனத்தை உலகறிய செய்யும் முயற்சியாக மலேசியா, சிங்கப்பூர், கனடா, வட அமேரிக்கா போன்ற பகுதிகளில் இந்த குழு நடனத்தை வெளிபடுத்த உள்ளதாகவும் இதற்க்காக நிதி திரட்டும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் வரும் 26ம்தேதி, ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த திட்ட மிட்டு உள்ளதாகவும், இந்த இசை நிகழ்ச்சியில், 7க்கும் மேற்பட்ட புகழ் மிக்க இசை கலைஞர்கள் மற்றும் 14க்கும் மேற்பட்ட இசை கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தெரிவித்தார். இதனால் உலகெங்கும் உள்ள முருக பக்தர்களை பக்தி எனும் ஒரே நேர் கோட்டில் நிறுத்த வேண்டும் என்று இந்த சுற்று பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் இதில் சுமார் 15 ஆயிரம் பார்வையாளர்களை, நேரடியாகவும், 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இசை வடிவிலும் சந்திக்க உள்ளதாக கூறினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *