கற்போர் வட்டம்” எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையம்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு பணிகளில் மாவட்ட இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாகவும் அரசு பணிகள் மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள “கற்போர் வட்டம்” எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருமான வி.இராஜாராமன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து பேசினார்.கற்போர் வட்டம் என்பது கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தி வருகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். இந்த கற்போர் வட்டத்தை சரியான முறையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இன்று கூடுதலான அமைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இன்றைக்கு இந்த மையம் ஆரம்பித்துள்ளோம். கற்போர் வட்டம் என்பது அடிப்படையாக ஒரு கற்றல் மையம் ஆகும். இதற்காக அரசு தேர்வுகளுக்காகவும் சரி, தனியார் வேலைவாய்ப்புக்கான தேர்வுகளுக்காவும் சரி மாணவர்களை பொறுத்தவரை சென்னைக்கோ, அருகில் இருக்கக்கூடிய மாவட்ட தலைநகரங்களுக்கு வந்து பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்பது தான் நோக்கமாகும். இந்த கற்போர் வட்டத்தில் மூன்று அடுக்குகள் ஏற்பாடு செய்திருக்கிறோம்முதலாவாதாக ஊரக வளர்ச்சித்துறை சார்பாக அந்தந்த ஊராட்சியில் இருக்கக்கூடிய நூலகங்களின் ஒவ்வொன்றிலுமே கற்போர் வட்டம் கார்னர் என்ற ஒன்றை ஆரம்பிக்கிறோம். இந்த கற்போர் வட்டத்தின் கார்னரில் என்னென்ன அரசு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க என்ன கடைசி நாள் உள்ளது. அதற்கு என்னென்ன தகுதிகள், என்னென்ன பாடப்புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும் போன்ற விவரங்கள் கொடுப்பதற்காக தகவல் பலகை ஒன்றை அனைத்து ஊராட்சி நூலகங்களிலும் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து “கற்போர் வட்டம்” எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்து, மாணவ மாணவியர்களோடு கலந்துரையாடி, இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினர்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,திருவள்ளூர் சார் ஆட்சியர் (பொ) கேத்தரின் சரண்யா,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் கா.விஜயா, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.