மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Loading

மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய பணிகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுமன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜாவிடம் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.இரண்டு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திருவாரூர் வருகை புரிந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக பழைய நினைவுகளை நினைவுகூரும் வகையில் திருவாரூர் தியகராஜா கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் படகில் சென்று பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து மன்னார்குடியில் திமுக பிரமுகர் பாலு இல்லாதிருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அதன்பின் சிறப்புரையாற்றினார்.மேலும் திருமணத்தை நடத்தி வைத்த பிறகு மன்னார்குடியில் ரூ.27 கோடியில் புதியதாக பேருந்து நிலையம் கட்டுவதற்காக பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   இந்நிகழ்வில் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply