15 நிமிடத்திற்கும் மேலாக போட்டி போட்டு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் இருந்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்று கொண்டிருந்த ஆம்புலன்சை ஒரு மோட்டார் வாகனம்  ( load van) வழி விடாமல் கிட்ட தட்ட 15 நிமிடத்திற்கும் மேலாக  போட்டி போட்டு  வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விடாமல் ஒலி எழுப்பியும் அந்த வாகனம் வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. இதனை அடுத்து ஓட்டுநர் தனது உதவியாளர் உதவியுடன் தனது மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து  போக்குவரத்து துணை ஆய்வாளர் சுரேஷ் குமாருக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. இந்த காட்சிகளை  ஆய்வாளர் வில்லியம்பெஞ்சமின் ஆய்வு செய்த பின் கிட்ட தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் அந்த வாகனம் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு கொடுக்கவில்லை என்பது  தெரிய வந்தது. இதனை தொடர்ந்து  அந்த மோட்டார் வாகனத்திற்கு மோட்டார் சட்டம் 194(E) படி அந்த வாகனத்திற்கு 10000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் அந்த வாகனத்தை ஒட்டி சென்ற ஓட்டுநருக்கு மோட்டார் சட்டம் 184 படி 1000 ரூபாயும் சேர்த்து 11000 ரூபாய் அபராதமும்  விதித்தார். ஆய்வாளரின் இந்த செயலானது  உயிரை காக்க கொண்டு செல்லும்  ஆம்புலன்ஸ் வாகனத்தின் பணியினை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையக்கூடும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *