ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 வெண்சங்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழாவானது பக்தர்கள் திரளாக பங்கேற்க தமிழ்மறையில் நான்குகால யாக பூஜைகளுடன் விடிய விடிய கோலாகலமாக நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிகாலபைரவர்ஸ்ரீசித்தர்பீடத்தில்,சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி விழா ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை 10மணிக்கு கணபதி, -நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா இனிதே தொடங்கியது. தொடர்ந்து, மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹாபூஜை-தீபாரதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகள் சிவபெருமானுக்கு 1008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவரா திருவாசக பராராயணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகளுடனும் இனிதாக நடைபெற்றது.வழிபாட்டின் இடையே இரவு 10மணிக்கு ‘மனித வாழ்க்கையில் மனநிறைவு தருவது இறை அருளா.? அல்லது இறைவன் தந்த பொருளா.? என்ற தலைப்பில் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 12மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையானது மஹா அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணத்துடனும், அதன்பின்பு அதிகாலை 2மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையானது சதுர்வேத பாராயணத்துடனும் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து, அதிகாலை 4மணிக்கு நான்காம் கால யாக பூஜையானது சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாரதனைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா இனிதே நிறைவடைந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.