தலைவர் மொக்தியார் அலி மச்சான் அவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Loading

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா அவர்கள் கடந்த மாதம் ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அகால மரணம் அடைந்தார் இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே சி இளங்கோவன் அவர்கள் போட்டியிட உள்ளார் இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக செஞ்சி பேரூராட்சி தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மை இனர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மச்சான் அவர்களின் மகனுமான மொக்தியார் அலி மஸ்தான் கைச்சின்னத்திற்கு நடை பயிற்சி மேற்கொண்டு சம்பத் நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அப்பகுதிகளில் இருந்த காய்கறி கடைகளில் உள்ள வியாபாரிகளிடம் கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் அப்பொழுது அவர் பொதுமக்களிடம் கூறுகையில் விவசாயிகளின் நலனுக்காகவும் வியாபாரிகளின் நலனுக்காகவும் பாடுபடுகின்ற அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு செய்துவரும் சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்து கூறி கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் மூன்று நான்கு பேர் மட்டும் நடை பயிற்சி மேற்கொண்டு கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *