பட்டாபிராம் இந்து கல்லூரியில் மாபெரும் தமிழக் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

Loading

திருவள்ளூர்  மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும், இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக நடைபெறும் மாபெரும் தமிழக் கனவு என்ற  பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும், இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கடத்துவது குறித்து மாபெரும் தமிழக் கனவு என்னும் இந்த பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்து வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும்.  இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.அந்த வகையில், இந்த தமிழ்க்கனவு என்ற நிகழ்ச்சி திருவள்ளூர்  மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இந்த தமிழ்க் கனவு திட்டத்தைப் பொறுத்தவரை இந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல பல்வேறு கல்லூரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் வருகை தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் இந்த மாபெரும் தமிழ்க் கனவு என்ற நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுருக்கக் கூடிய கையேடு மற்றும் இன்றைக்கு வந்திருக்கக் கூடிய சிந்தனையாளர்களுடைய  கருத்துக்கள் அனைத்தும் வாழ்க்கையில் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.முன்னதாக மாணவ, மாணவியர்களுக்காக கல்வி, கல்விக்கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளையும், மாபெரும் தமிழ் கனவு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட காணொளியையும் மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சந்தத் தமிழும் சங்கத் தமிழும் என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் யுகபாரதி,விடுதலைப் போரில் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உரையாற்றினர்.இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, இந்து கல்லூரி முதல்வர் க.கல்விக்கரசி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *