அகிலம் உள்ளவரை அனைத்து மகளிரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை போற்றுவார்கள்

Loading

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.”
என்ற திருவள்ளுவரின் வைர வரிகளுக்கேற்ப தினை அளவு நன்றி செய்தினும் அப்பயனை உணர்ந்தவர்கள் பனை அளவாக கருதுவார்கள். அவ்வாறாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் சமூக நீதி என்ற வெளிச்சத்துடன் தமிழக அரசானது பெண்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும், பொருளாதார வளர்ச்சி அடையவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார்கள், அதில் கொரோனா கால இன்னல்களில் இருந்து மகளிர் சுய உதவி குழுவினரை காத்திடும் பொருட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்து மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இத்திட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஒரு பொன்னான திட்டமாகும்.இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுயஉதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக பெறப்பட்டமகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்திட உத்தரவிட்டார்கள். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் 68 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு வங்கி, 3 மலைவாழ்மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 10 கிளைகள் ஆகிய 82 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு 31.03.2021 அன்று நிலுவையாக இருந்த மகளிர் சுயஉதவி குழு கடன்களின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுதி பெற்ற 1,407 மகளிர் சுயஉதவி குழுக்களின் 15,176 மகளிர் உறுப்பினருக்கு அசல் தொகை ரூ 11.04 கோடி, வட்டி தொகை ரூ.5.29 கோடிஅபராத வட்டி ரூ.1.17 கோடி இதர செலவினம் ஆக கூடுதல் ரூ.2.24 இலட்சம் ஆக மொத்தம் ரூ.15.54 கோடி மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று தமிழக அரசு மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மேலும், மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டுறவு கடன் சங்கங்களின் தொழில் மற்றும் இதர கடனுதவிக்காக பெறப்படும் கடன்களை முழுமையாக செலுத்தி தொடர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.சின்னசேலம் வட்டம், குரால் கிராமம், கங்கா மகளிர் சுய உதவி குழுத் தலைவி திருமதி.செல்வி, க/பெ.கந்தசாமி அவர்கள் தெரிவித்ததாவது:கங்கா மகளிர் சுய உதவி குழு – குரால்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், குரால் கிராமம், கங்கா மகளிர் சுய உதவி குழுத் தலைவியாக உள்ளேன். எங்கள் குழுவின் 17 நபர்கள் உறுப்பினராக உள்ளனர். நாங்கள் கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் குரால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக பல்வேறு வகையான தொழில் புரிவதற்கு ரூ.1,49,662 கடன் பெற்றுள்ளோாம். கொரோனா தொற்று காரணமாக எங்களுக்கு கடன் செலுத்துவது மிக சிரமமாக இருந்தது என்ன செய்வது என்று தவித்த பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்யேற்ற உடனே மகளிர் குழு உதவி குழுக்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன் மூலாக கூட்டுறவு துறை அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவரின் வாயிலாக கடன்
தள்ளுபடிக்கான சான்றிதழினை வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காத்துள்ளார். மிகச்சரியான நேரத்தில் எங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கியதன் மூலம் எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோன்று மக்கள் நலம் மட்டுமல்ல மகளிர் நலனையும் பேணிகாத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை கங்கா மகளிர் தெரிவித்துக்கொள்கிறேன். சுய உதவி குழு சார்பாக
சங்கராபுரம் வட்டம் அ.பாண்டலம் கிராமம், சந்தனம் மகளிர் சுய உதவி குழுத் தலைவி திருமதி.மீனாட்சி, க/பெ.வெங்கடேசன் அவர்கள் தெரிவித்ததாவது:சந்தனம் மகளிர் சுய உதவிகுழு அ.பாண்டலம்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் அ.பாண்டலம் கிராமத்தில் சந்தனம் மகளிர் சுய உதவி குழுத் தலைவியாக உள்ளேன். எங்களுடைய குழுவின் 17 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாங்கள் அ.பாண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ரூ.3,69,287 தொழிற்கடன் பெற்றோம். கொரோனா பேரிடர் காலத்தினால் எங்களால் சரிவர அசலும் வட்டியும் செலுத்த இயலாத சூழ்நிலையில் இருந்தோம். எப்படி கடனை செலுத்துவது என்று எண்ணியிருந்த வேலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்யேற்ற உடனே மகளிர் குழு உதவி குழுக்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன் மூலமாக எங்கள் குழு உறுப்பினர்கள் துணி தையல் கடை, பூவியாபாரம், மளிகை கடை, பால் வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்களுக்கு பெற்ற கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் எங்களுடைய பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.
மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்து வந்தாலும் பெண்களின் வாழ்வாதாரத்தை காத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் பொருளாதார சுயசார்பு பெற்றிட உதவிடும் கடன் தள்ளுபடி திட்டம் பெண்களுக்கான ஒரு முத்தான திட்டமாகும். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அகிலம் உள்ள வரை அனைத்து மகளிரும் போற்றுவார்கள் என நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ச்சி அடையும் நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிக்குச் செல்லும் ஏழை எளிய மகளிரின் துயர் துடைக்கும் வகைளில் அரசு நகர பேருந்துகளில் இலவச பயணச்சலுகை, உள்ளாட்சிகளில் மகளிரை அதிகாரமிக்கவர்களாக உருவாக்கிட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்களில் 50 விழுக்காடு, பெண்களுக்கு ஒதுக்கீடு போன்று பல்வேறு சிறப்பான திட்டங்களின் வரிசையில் கொரோனா கால இன்னல்களில் இருந்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களை காத்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்திட உத்தரவிட்டதன் மூலமாக சுய உதவி குழுக்கள் மூலமாக அனைத்து தரப்பு மகளிரும் தன்னிறைவு பெற்ற வாழ்கையை வாழவும், பெருளாதார வாழ்வில் மேம்பட தொழிற்வாய்ப்புகளை ஏற்படுத்தியும், பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றமடைய செய்து சுய வருமானத்தை ஈட்டி கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வித்திட்டுள்ளார். இதுவே திராவிட மாடல் ஆட்சிக்கு மணிமகுடமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *