ஜெப கூடாராம் கட்ட எதிர்ப்பு ஊர் பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மறுகால்தலை விளை பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஊரில் வேற்று பகுதியை சேர்ந்த நபர்கள் ஜெபக்கூடம் கட்டிவருவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர்.குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மத கலவரத்திற்கு பிறகு வேணுகோபால் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏற்கனவே இருக்கின்ற வழிபாட்டுத் தலங்களின் அருகாமையில் மாற்று மதத்தினர் ஆலயங்கள் கட்டவோ, வேறு மத,தெய்வ வழிபாடு நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது,அது தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மறுக்கால்தலைவிளை பகுதியின் சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான இந்துக்கள் வசித்து வருகின்றனர், அப்பகுதியில் சுடலைமாடசாமி கோவில்,அம்மன் கோவில் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உள்ளது,இதன் அருகாமையில் விவசாய நிலத்தை வாங்கிய தனிநபர் தற்போது கிறிஸ்தவ மத வழிபாடு ஜெபக்கூடம் கட்டி வருவதாக எழுந்த புகாரின் பேரில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், இதனால் வேறு வித பிரச்சனைகள் கலவரங்கள் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் தற்போது இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியும் இன்று கிராம நிர்வாக அதிகாரியிடம் இந்து மக்கள் ஆண்டு ஆண்டுகளாக வசித்துவரும் பகுதியில் தேவாலயம் கட்ட முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தி இதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர் மேலும் தேவாலயம் கட்ட அனுமதி அளித்தாலோ முயற்சித்தாலோ இந்து அமைப்புகள்  மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *