திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள PSNA பொறியல் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கம்.
திண்டுக்கல்PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறையும் தேசிய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொழில்நுட்ப கழகமும்( NITTTRசென்னை) இணைந்து உலக அளவிலான ஒரு நாள் கருத்தரங்கினை P.S.N.A கல்லூரியின் ரங்கலக்ஷ்மி கலையரங்கத்தில் நடத்தினர். இவ்விழாவிற்கு கல்லூரியின் இயந்திரவியல் துறையின் தலைவர் முனைவர் கண்ணன் வரவேற்புரை வழங்க கல்லூரியின் தலைவர்R.S.K. ரகுராமன் மற்றும் முதல்வர் முனைவர் வாசுதேவன் முறையே சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கிற்குNITTTR சென்னையின் இயக்குனர் முனைவர் உஷாநடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தலைமை உரை ஆற்றினார். இக்கருத்தரங்கிற்கு 19 நாடுகளைச் சேர்ந்த23 பிரதிநிதிகள் பங்கேற்று அவரவர் நாடுகளில் கல்வி முறை, பண்பாடு,மற்றும் மேலாண்மை சார்ந்த தலைப்புகளில் கருத்துக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில்PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கும் தேசிய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொழில்நுட்ப கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. மேலும் இதில் பங்கேற்ற அனைவருக்கும் இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் குழந்தைவேலு(NITTRT சென்னை) நன்றியுரை நிகழ்ச்சி கருத்தரங்கு இனிதே நிறைவடைந்தது. கருத்தரங்கின் அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவர், மற்றும் பேராசிரியர்கள், ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.