உலகப் போர்களுக்கு காரணமான “நேட்டோ” அமைப்பு கலைக்கப்பட வேண்டும் :

Loading

சென்னை:  போர்களுக்கான காரண ங்களை இவ்வுலகை விட்டு அகற்றிட வேண்டும். அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்கள் அனைத்தையும் துடைத்தழித்திட வேண்டும் .உலகப் போர்களுக்கு காரணமான “நேட்டோ” அமைப்பை கலைத்திட வேண்டும். இராணுவத்திற்கான பல லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகளை மக்களின் நலன் சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு மடை மாற்றம் செய்திட போராட வேண்டும். நாடுகளுக்கு இடையே சமத்துவத்தை யும் ஒற்றுமையையும் நட்புறவையும் ஒருமைப்பாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டும் .ஒட்டுமொத்த உலக சமாதா னத்தை பாதுகாத்திட வேண்டும் என அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழக மாநில மாநாட்டில் இடது சாரி ஜனநாயகம் மத சார்பற்ற கட்சி தலைவர்கள் கருத்துரைத்து பேசினர். அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழகத்தின் தமிழ் மாநில மாநாடு பிப். 12 அன்று சென்னை சூளைமேடு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கூட்டுறவு சங்க வளாகத்தில் தோழர் வீ. ராஜமோகன் நினைவரங் கத்தில் பேராசிரியர் வி.பி.ஆத்ரேயா மற்றும் க. முத்தியாலு தலைமை யில் நடைபெற்றது. “ஐப்சோ” மாநில துணைச் செயலாளர் பா. செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார் . அகில இந்திய பொதுச் செயலாளர்கள் ஆர். கிருஷ் ணகுமார், ஹர்சந்த் சிங் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர்கள் ஆ.கோபண் ணா ,பொன். கிருஷ்ணமூர்த்தி, திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன், மதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் அந்திரிதாஸ்,  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் எஸ்.பாஸ்கரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.  ஆசைத் தம்பி , ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் இ.ஜோசப் ராஜா, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முஸ்தபா , ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் நவமணி உள்ளிட்ட இடதுசாரி ஜனநாயக மத சார்பற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மாநா ட்டை வாழ்த்தி பேசினர் .அவர்கள் பேசியதாவது : “புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என்கிற பாரதிதாசன் பாடல் வரிகளை சிரமேற்கொண்டு , போர்களுக்கான காரணங்களை இப்பூவுலுகை விட்டு அகற்றிட வேண்டும் .அணு ஆயுதங் கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்தொழித்திட வேண்டும் .உலக நாடுகள் இராணுவ த்துக்கு செலவிடும்  பல லட்சம் கோடி ரூபாய் நிதியை மக்களின் வளர்ச்சி க்கும் முன்னேற்றத்திற்குமாக மடை  மாற்றம் செய்திட  போராட வேண்டும். உலகப் போர்களுக்கு காரணமான “நேட்டோ” அமைப்பு கலைக்கப்பட வேண்டும் . அனைத்துவகை பயங்கர வாதத்தையும் வேரறுத்திட வேண்டும். நாடுகளிடையே சுரண்டலற்ற, சமத் துவ  ,பரஸ்பர சகோதரத்துவ  ஒத்து ழைப்பை ஒருமைப்பாட்டை உயர்த்தி பிடித்திட வேண்டும் .ஒட்டு மொத்த உலக சமாதானத்தை பாதுகாத்திட வேண்டும் .இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப் பாட்டை, பன்முகத்தன்மையை மதச் சார்பின்மையை , ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டநோக்கங்களோடு செயல்படுபட்டு வரும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தை உயர்த்தி பிடித்திட வேண்டும் .சக்தி வாய்ந்த சமூக ஊடகங்களின் வழியாக மேற்படியான முழக்கங் களை மேலெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 1950 களிலே உலக சமாதான கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளும் அணுஆயுத போர் ஆபத்தும்  வலுவான சமாதான இயக் கத்தை கட்டமைப்பதற்கான அவசியத் தை உருவாக்கியது. 1951ல் அகில இந் திய சமாதான கழகம் தோற்றுவிக்கப் பட்டது. உலக சமாதான கழகத்துடன் இணைந்த அமைப்பாக செயல்பட தொடங்கியது. இந்த இரண்டு அமைப் புகளிலும் ரொமேஷ் சந்திரா உள்ளி ட்ட ஆளுமைகள் தலைமை பொறுப் பேற்று செயல் பட்டனர். இந்த “ஐப்சோ” அமைப்பில் இடதுசாரி ஜனநாயக மற்றும் மத சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய பாஜக அரசின் மதவெறி அரசியலை  முறியடித்தாக வேண்டியதும், மதநல்லிணக்கத்தை மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்ப வேண்டியதும் அவசர அவசியமாக உள்ளது ,இதற்காக அகில இந்திய சமாதான உரிமை பட்டு கழகம் தொட ர்ந்து  போராடும் என பேசினர்.அகில இந்திய சமாதான கழகத்தின் தமிழ் மாநில வளர்ச்சிக்கு மறைந்த வீ. ராஜ்மோகன் போன்றவர்கள் பாடுபட் டிருப்பதை நினைவு கூற வேண்டும். பல கட்சி அமைப்பினர்களை கொண் டதான ஒரு ஜனநாயக அமைப்பாக “ஐப்சோ” செயல்பட்டு வருகிறது. உலக ஏகாதிபத்தியத்தை, அவை முன்னெடுக்கும் உலகப் போர்களை எதிர்த்து குரல் எழுப்பி, உலக சமாதா னத்தை வலியுறுத்தி வருகிறது “இப்சோ” நிறைவறியை மத வெறி யை எதிர்த்து இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்ட த்தை பாதுகாத்திட வேண்டிய செயல் பாடுகளில் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. ஆதலால் ஒரு பரந்துபட்ட மக்கள் மேடையாக “ஐப்சோ” பலப் பட்டு வருகிறது என தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஐ. ஆறுமுக நயினார் அமைப்பின் வேலை  அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். “ஐப்சோ” அனைத்து அரசியல் கட்சி அமைப்புகளின் ஐக்கிய மேடையாக இருந்து வருகிறது. இதனை வலிமை யான இயக்கமாக மேலெடுக்க வேண் டிய தேவை இருக்கிறது. உலக மேலா திக்கத்தை கையிலெடுக்க வேண்டி, அமெரிக்க ஏகாதிபத்தியம் “நேட்டோ” அமைப்பை நிர்ப்பந்தித்து ,உலகப் போர்களை, அணுஆயுதங்களின்  உற் பத்தியை மேற்கொண்டு உலக அழி வை நடத்தி வருகிறது. இவற்றை யெல்லாம் எதிர்த்து உலகெங்கும் உலக சமாதானத்தை நிலை நிறுத்திட “ஐப்சோ” தொடர்ந்து செயலாற்றிட செயலூக்கம் பெற்றிட நாம் அர்ப்பணி ப்புடன்  உழைத்திட வேண்டி இருக்கி றது என தமிழ் மாநில செயலாளர்  ஜி. ஆர். இரவீந்திரநாத் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். திருவாரூர் இராமதாஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிருத்திகா, சிவகங்கை மாவட்டம் கிருஷ்ணன்,  மதுரை மகாலட்சுமி,  யுசிபிஐ ராஜன், நாகை சிபிஎம் கட்சியின் காளிதாஸ் , தஞ்சை சுந்தரமூர்த்தி,  தென்காசி திருமலை முத்துக்குமார் உள்ளிட்ட மாநாட்டு பிரதிநிதிகள் பலரும் கருத்துரைத்து பேசினர்.டாக்டர்ஜி.ஆர்.இரவீந்திரநாத் அனைவரது ஆலோசனை கருத்துக ளையும் தொகுத்துரைத்து பேசினார.”நேட்டோ அமைப்பு கலைக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட பல தீர்மானங் கள் முன்மொழியப்பட்டு நிறைவேற் றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று அவர்களின் ஒப்புதலோ டும் வரவேற்புபோடும் பொறுப்பாளர் கள் அறிவிக்கப்பட்டனர்.91பேர்கொண்ட பொதுக்குழு, 31 பேர் கொண்ட நிர்வாக குழு ,17 பேர் கொண்ட நிர்வாக பொறுப்பாளர்கள்   7 பேர் கொண்ட மதிப்புறு தலைமைக் குழு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டது .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். மாநில, தேசிய, சர்வதேசிய மக்கள் நலன் குறித்த பிரச்சனைகளில்,ஒன்று பட்டு செயல்பட வேண்டும். மக்கள் மேடையாக “ஐப்சோ”வை வளர்த்தெடு த்திட வேண்டும் என வீரபாண்டியன் பேசினார் .
ஐப்சோ மாநில பொருளாளர் ஆர். இராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். 15 மாவட்டங்களில் இருந்து 100க்கும்  மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *