சுகாதார பணியாளர்களை வீட்டு வேலை செய்ய வலியுறுத்தும் துணை இயக்குனர்… விடுதலை சிறுத்தை கட்சியினர் கலெக்டரிடம் மனு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் துரை பிளாக்கில் சுகாதாரப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பணியாளர்களை சுகாதார பணியாளர்கள் துணை இயக்குனர் வீட்டில் அனைத்து பணிகளையும் செய்ய வைப்பதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தனது நோயுற்ற தாயாருக்கு அனைத்து பணிகளையும் செய்ய வைப்பது மற்றும் வீட்டு வேலைகள் கழிவறைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்ய வைத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மூலம் ராஜாக்கமங்கலம் துறை வட்டார அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட ஜீப் மூலம் மேற்படி சுகாதார பணியாளர்கள் காலை 9 மணிக்கு ராஜாக்கமங்கலம் துறை வட்டார அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வேலை முடிந்த பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வட்டார அலுவலகத்திற்கு திரும்பி கொண்டு வந்து விட்டு விடுவது வழக்கமாக நடை பெற்று வருகிறது. இவ்வாறான துஷ்பிரயோக செயல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வீட்டிற்கு செல்லும் மேற்படி பணியாளர்களை பல்வேறு விதமான வழிகளில் வீட்டில் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதற்கு உறுதுணையாக வட்டார மருத்துவ அலுவலர் பீரீனா சுகுமார் கண்காணிப்பாளர் ஜேசுதாஆகியோர் இதற்கு உறுதுணையாக தொடர்ந்து செயல்பட்டு குற்ற செயல்களை செய்து வருகின்றார்கள். பணியாளர்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பணியாளர்களை மிரட்டி வேலை வாங்கி வருவதாகவும், இந்த செயல் அரசு பணியாளர் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் படி ஒரு அலுவலகத்தில் பணி புரியும் உதவியாளர்கள் மேல் அதிகாரிகளின் வீட்டில் சொந்த வேலைகளுக்காக பயன்படுத்துவது தவறு என்று தீர்ப்பு ஏற்கனவே நடை முறையில் உள்ளது. சொந்த வேலைகளுக்கு அலுவலக பணியாளர்கள் அழைத்துச் செல்வது குற்றமாகும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த சுகாதார பணியாளர்களை அச்சுறுத்தலின் பேரில் வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறார்கள். எனவே இது குறித்த ரகசிய விசாரணை செய்து மேற்படி எதிர் மனுதாரர்கள் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்யும்படி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளித்தனர்…