பெண்களுக்கான சர்வதேச அறிவியல் தினம் கொண்டாட்டம்.

Loading

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன்  வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.வெங்கடேஸ்வரி, ந.நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.பிரகாஷ் ஆகியோரிகளின்  ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை  ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடுப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வதேச பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.அனைவரையும் பரிமளா வரவேற்றார் . இதில்  கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா  பேசியதாவது   பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகங்களில் பெண்களும் குழந்தைகளும் வகிக்கும் முக்கிய பங்கை நினைவுபடுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அறிவியலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சர்வதேச தினம் அவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.யு.என் பெண்களின் கூற்றுப்படி, “பொது சுகாதாரம், தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் புதுமையான சட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெண்கள் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளனர்,
நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியல் மங்கை மேரி கியூரி. கதிரியக்கம் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் அவரை பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்காக நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி. இவரைத் தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் அறிவியல் அதிகாரியான பெக்கி விட்சன், 1953ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி மேரி தர்ப், எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தடுப்பில் திருப்புமுனை ஏற்படுத்திய குவாரிஷா அப்துல் கரீம், 2008ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற சோயோன் யீ, இப்படி உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார் இந்தியாவின் முதல் தலைமுறை பெண் விஞ்ஞானிகளில் ஒருவரும், தாவரவியல் தாரகை என்றும் போற்றப்படும், கேரளத்தைச் சேர்ந்த ஜானகி அம்மாள். மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்த ஜானகி அம்மாள், 1957-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
அடுத்து, இந்தியா தந்த முனைவர் ஆசிமா சாட்டர்ஜி, புற்றுநோய் எதிர்ப்பு குணம் கொண்ட நித்தியகல்யாணி தாவரத்தில் உள்ள வின்கா ஆல்கலாய்டு தொடர்பாக ஆராய்ந்தவர்.வானிலைத் துறையிலும் சாதித்த இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி தான் அன்னா மணி. சர் சி.வி. ராமனுடைய இயற்பியல் மாணவிகளில் ஒருவரான இவர், சூரியக் கதிரியக்கம், பாதகமான கதிரியக்கத்தைத் தடுக்கும் ஓசோன் படலம், காற்று ஆற்றல் ஆகியவற்றை அளப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்  என்றும் பெண்குழந்தைகள் அனைவரும் அறிவியல் துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று பேசினார்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் ,பரிமளா ,பாக்யா,சண்முகபிரியா ,அபிநயா,உள்ளிட்டோர் செய்திருந்தார்.நிறைவாக பெமினா நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *