மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கல்வெட்டை திறந்து வைத்தார் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், குருபுரம் பகுதியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கும் பணிகளில் முதற்கட்டமாக ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மூன்று நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திறந்து வைத்து பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள விவசாயிகளோடு கலந்துரையாடி, இனிப்புகளை வழங்கி, வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து பேசினார்.தமிழ்நாடு முதலமைச்சரால் திருவள்ளூர் மாவட்டத்தில் குருபுரம் கிராமத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிரந்தர பகுதி மூடிய 10 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 3 கிடங்குகள் ரூ. 2.81 கோடி மதிப்பீட்டிலான 3 நிரந்தர பகுதி மூடிய சேமிப்பு கிடங்குகள் திறந்து வைக்கப்பட்டது என்பது ஒரு மகிழ்ச்சிக்கரமான விஷயமாக திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டம், குருபுரம் கிராமத்தில் முதல் முறையாக 5 ஏக்கர் பரப்பளவில் 30,000 மெ.டன் நெல் மணிகள் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான திறந்தவெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மணிகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டு வந்தது. கூடுதலாக இடம் தேவைப்படுகிறது என்பதை தெரிவித்ததன் அடிப்படையில் அதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக செயற்பொறியாளர் பகவதி அம்மாள், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.