கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள் ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

Loading

கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள் ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்
தூத்துக்குடி. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 21 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையொட்டி வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25 ஆகிய இரு தினங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தொகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனையை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் வாக்காளர்களை நேரடியாக அவரது இல்லங்களுக்கே சென்று திமுக அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, துண்டு பிரசுரம் விநியோகித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், ஒன்றிய செயலாளர்கள், முருகேன், ராதாகிருஷ்ணன், அப்பகுதி வட்ட செயலாளர் எட்வின், மாமன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி மணி, மாவட்ட பிரதிநிதிகள் மணி, செந்தில்குமார் மற்றும் கருணா, அல்பர்ட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *