பெரியகுளம் தோட்டக்கலை மாணவர்கள் விழிப்புணர்வு முகாமில் தோட்டக்கலைக் கண்காட்சி*
திண்டுக்கல், பிப் 9-திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட கிராமத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்(KAVIADP) கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஹேராம், ஜீவா, கலைவாணன், கமல்ராஜ், காவியன், கிருபாகரன், கிஷோர், வேகஹாசன் ஆகியோர் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற தோட்டக்கலைக் கண்காட்சி நடத்தினர். இக்கண்காட்சியில் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள் சார்ந்த மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாய பெருமக்களுக்கு விளக்கினர். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திரு.எஸ்.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களின் தோட்டக்கலைக் கண்காட்சியினை பார்வையிட்டார். அத்துடன் மாணவர்களிடம் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் சாணார்பட்டி வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் அதிகாரிகள் முனைவர். அலெக்ஸ் ஐஸக்(தோட்டக்கலை உதவி இயக்குநர்), திருமதி.சாவித்திரி(தோட்டக்கலை அலுவலர்) மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆண்டிச்சாமி, சுமதி, கலைவாணி ஆகியோர் பங்கேற்றனர்.