உளுந்தூர்பேட்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு அடங்கல் சம்பந்தமாகவும் கிராமங்களில் கணக்கு வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் அதோடு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தினந்தோறும் சென்று பொதுமக்கள் பிரச்சனையை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் யோக ஜோதி உளுந்தூர்பேட்டை தாசில்தார்.
ராஜ் சமூக நல தாசில்தார் பாண்டியன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் லலிதா தலைமை நிலைய அலுவலர் விஜயராகவன் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்