மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் வங்கி பற்றட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் :
தமிழ்நாடு அரசு சமூக நலன் (ம)மகளிர் உரிமைத்துறை சார்பில் “புதுமைப்பெண் இரண்டாம் கட்ட துவக்க விழா” இந்துக் கல்லூரியின் உள் அரங்கில் நடைபெற்றது.விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தில் தமிழக முழுவதும் 1.8 லட்சம் மாணவிகள் பயனடையுள்ள இந்த திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 – ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை அரசு பள்ளிகளில் கல்வி பயின்று 78 அரசு மற்றும் அரசு உதவி பெரும் இதர தனியார் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் 1473 மொத்த பயனாளிகளில் 949 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் வங்கி பற்றட்டைகளை வழங்கி தலைமை உரையாற்றினார்.என்னுடைய உரையை துவங்குவதற்கு முன்னால் மூன்று மகிழ்ச்சியான செய்திகளை மனதில் ஆழமான பதிந்துள்ள செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..நான் காவல் துறைக்கு புதிய பரிமானங்கள் வழங்ககூடிய நிகழ்ச்சியில் டிஜிபியிடம் கேள்வி ஒன்றை கேட்டேன்..17 காவல் உதவி ஆணையருக்கு பதவிகள் உயர்வுகள் வழங்கப்பட உள்ளது அதில் 13 பேர் பெண்கள் என கூறியது மகிழ்ச்சியான செய்தி..தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சிக்காக வருகை தந்து கொண்டிருந்த போது அமைச்சர் பொன்முடி கூறுயது, புதுமை பெண் திட்டம் கடந்த ஆண்டை விட 23 சதவிதம் உயர்ந்துள்ளது..மூன்றாவது ஏற்கெனவே இந்து கல்லூரிக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் நாசர் கூறியது மகிழ்ச்சி.அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமை என்றும்,மகாகவி பாரதியார் கலவல கண்ணனை புகழ்ந்தது போல கல்வியை பலருக்கு எட்டாத கணியாக மாற்றி வைத்த காலத்தில் கலவல கண்ணன் கல்வி நிறுவனங்களை நிறுவினார்..திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த போது அரசு நிதியுடன் தொடங்கப்பட்ட கல்வி நிலையம் தான் இது..முன்னாள் முதல்வர் கலைஞர் தனது பேனாவால் போட்ட கையெழுத்து தான் கல்வி திட்டம்..தர்ம மூர்த்தி என்ற பெயரில் இயங்கி வரும் கல்வி குழுமத்தில் புதுமை பெண் திட்டத்தை துவங்கி வைப்பது பெருமை கொள்கிறேன்.பெண்களுக்கு கல்வி மிக முக்கியம்.மத ரீதியாக வர்த்தக ரீதியாக திமுக வரலாறு என்பது 2000 ஆண்டுகளாக அடக்கிய வைக்கப்பட்ட ஒரு இனம்..அடக்குமுறை எந்த வழியில் வந்தாலும் அதை நாம் எதிர்க்கிறோம்..கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்ககூடிய முயற்சியை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம்..ஏராளமான திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வந்துள்ளோம்..1980ல் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை,அரசு பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிட இட ஒதுக்கீடு,தற்போது 50 சதவிதமாக உருவாகியுள்ளது..மகளிர் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது..நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது மகளிருக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.தற்போது ஆட்சி பொருப்பேற்று பெண்களுக்கு இலவச பயணத்திட்டம்,மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது..100 வருடத்திற்கு முன்னாள் தந்தை பெரியாருடன் இனைந்து ராமமிர்த அம்மையார் போராடியதற்கு காரணமானவரின் பெயரால் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது..ராமமிர்த அம்மையாரின் தாயார் அவரை வளர்ப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளான போது 10 ரூபாய்க்கு விற்கப்பட்டவர் தான் ராமமிர்த அம்மையார்.. அவரின் பெயரில் தற்போது புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது..குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு சார்பில் ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.. அதில் ராமமிர்த அம்மையாரின் புகழை உய்ர்த்துவிதமாக ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது.. அப்படிப்பட்ட அம்மையாரின் பெயரில் தற்போது திட்டம் துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்ட வடசென்னையில் துவங்கப்பட்ட போது 1,14,000 மாணவிகள் பயனடைந்தனர்..குடும்பத்தினரின் பொருளாதார சூழ்நிலையால் படிப்பை நிறுத்துள்ள மாணவிகளின் படிப்பை தொடர்ந்துள்ளது தான் இந்த திட்டத்தின் வெற்றி.இதன் காரணமாக கல்வியின் வள்ர்ச்சி மற்றும் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும், குழந்தை திருமணம் குறையும் உள்ளிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தான் திராவிட மாடல் ஆட்சி.மேலும் பல உதவிகளை செய்ய திட்டமிட்டு வருகிறோம்..படியுங்கள் படியுங்கள் படியுங்கள் என்பதை மட்டும் நாங்கள் அறிவுருத்தி வருகிறோம்.திருமணம் என்பது எப்படி முக்கியமோ பொருளாதார சூழ்நிலையும் மிக முக்கியம் என்பதை அறிந்து படிக்க வேண்டும்.கல்வி மட்டுமே யாராலும் அழிக்க முடியாத சொத்து என்பதை உணர்ந்து படிக்கும் காலத்தில் கவன சிதரல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை சகோரதரனாக தந்தையாக இருந்து உங்களை வழி நடத்திக்கொண்டிருக்கிறோம்.நாங்