சங்க தலைவர் எஸ். ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அவர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் அரசு செய்யும் நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்கியும் பணி செய்து கொண்டிருப்பது ஊடகங்களே. அப்படி பணி செய்து கொண்டிருக்கிற ஊடகங்களின் உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு பல சலுகைகளை அறிவித்திருந்தாலும் அவை முழுமையாக அவர்களுக்கு சென்று சேரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசு உழைக்கும் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் நல வாரியத்தை உருவாக்கி உறுப்பினர்களாகி அவர்களின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய ஒளி ஏற்றியதற்கு தமிழக அரசுக்கு பத்திரிகையாளர் சார்பில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு நலவாரியம் அமைத்து அதில் உறுப்பினர்களாக சேர்கிறவர்களுக்கு இணைக்கக்கூடிய ஆவணங்களில் ஆட்சியர் அடையாள அட்டையும் ஒன்றாக இருந்து வருகிறது. மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு ஆட்சியர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும் வட்டார செய்தியாளர்களுக்கு இன்னமும் அது எங்கும் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. தமிழக அரசு ஏற்படுத்தி தந்த இந்த அரிய வாய்ப்பினை வட்டார செய்தியாளர்கள் பயன்படுத்த முடியாமல் போவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பதிவு பெற்ற நிறுவனங்கள் வழங்குகிற செய்தியாளர்களுக்கான கடிதத்தின் அடிப்படையில் வட்டார செய்தியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அடையாள அட்டை வழங்கினால் அவர்களும் தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிற நலவாரியத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள முடியும். எனவே ஐயா அவர்கள் அதற்கான ஆணையை பிறப்பித்தால் பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை கிடைக்கும் அவர்களும் அங்கீகரிக்கப்படுவார்கள். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நாங்கள் பலமுறை முன்வைத்தும் அப்படியே இருக்கிற இந்த சூழ்நிலையில் இந்த அரசாணையை எதிர்பார்க்கிறோம்.என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட இயக்குனர் மோகன் ஐஏஎஸ் அவர்கள் பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.உடன் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர் கே. முருகன்
மாநிலத் துணைத் தலைவர் பா.ஜோதிநரசிம்மன் ,ரமேஷ்