பூந்தமல்லி அருகே சிகரம் ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு.

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்து உள்ள சென்னீர்குப்பம் சமுதாய நல கூடத்தில் சிகரம் ஓட்டுனர்கள் தொழில் சங்கத்தின் மாநில தலைவர் டில்லி பாபு தலைமையில் முதல் மாநில மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மற்றும் உதவும் கரங்களின் நிறுவனத் தலைவர் வித்யார் , ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் சார்பில் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம்  ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது ஒட்டுனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டம் 2019 -ஐ திரும்பப் பெற வேண்டும்,ஓலா,ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வாகனத்தை இயக்கும் கார் ஓட்டுநர்களுக்கு 10,00,000( பத்து இலட்சம் ) ரூபாய்க்கான விபத்து காப்பீடு ஏற்படுத்தி தர வேண்டும்.ஓலா ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களை உடனடியாக தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்,தமிழக அரசு கால் டாக்ஸி கட்டணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் பைக் டாக்ஸியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.இதில் மாநிலச் செயலாளர் ஆனந்தன், மாநில பொருளாளர் மகேந்திரன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *